ஏன், யாரு தெமுஜின்?

சென்னை Landmark புத்தகக் கடையில் சினிமா செக்‌ஷன்ல சுத்திகிட்டிருந்தபோது கண்ணுல பட்டது Genghis Khan - Life, Death and Resurrection.

இடம்மாறி கிடந்த அந்த புத்தகத்தை ஒரு நிமிஷம் புரட்டினேன். புக்கோட ஆசிரியர், எழுத்தாளர் John Man, Genghis விட்டுச்சென்ற பாரம்பரியத்தையும், அவனது ஆட்சி் ஏற்படுத்திய தாக்கத்தையும் ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான எழுத்துநடையாலும் அவன் வாழ்ந்த இடங்களுக்கும் காலத்துக்குமே என்ன கூட்டிகிட்டுப்போன மாதிரி இருந்தது. விலை 275ரூ. சீப்பா இருக்கவே, சேஃபா வாங்கினேன்.

ஹிஸ்ட்ரி-னாலே ஸ்கூல் டேஸ்ல முக்கால்வாசி பேர் மாதிரி எனக்கும் செம தூக்கம்தான் வரும். ஆனா, இந்த புக்குக்கு அப்புறம் எல்லாம் மாறிப்போச்சு.

ISBN-13: 978-0312366247Life & Death செக்‌ஷன்களில் Genghis வாழ்க்கையப் பத்தி ரொம்ப detailed-ஆ கொடுத்திருக்காரு. ஒரு பக்கம் அவனது Barbaric அணுகுமுறையும், அவனோட படைகள் செஞ்ச அநியாயங்களைப் பத்தியும் சொன்னாலும், மறுபக்கம் எல்லா மதங்களின் மேல் அவனுக்கிருந்த Open-minded approach போன்ற அவனது நவீன அரசியல் தத்துவங்களைப் பற்றியும் நிறையா சொல்லியிருக்கார்.

Genghis சென்ற இடங்களுக்கெல்லாம் போய், மிச்சம் இருக்கிற சிதிலமான அடையாளங்களை எல்லாம் சூப்பர் படங்களாக இணைச்சிருக்கார்.

ஐரோப்பாவுக்கும் ஒரு 'காட்டு' காட்டிட்டுத்தான் போயிருக்கு அவன் படைகள். ரஷ்யா, போலந்து, ஹங்கேரி எல்லாமே அவனால் 'ரிவிட்' அடிக்கப்பட்டவர்கள். இன்னிக்கும் ரஷ்யர்களுக்கு அவன் பேரக்கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே-னு கேள்வி.

மங்கோலியாவுல, of course, அவன் கடவுள். ஆனா, அவன் செத்தபிறகு புதைக்கபட்ட இடம் இன்னிவரைக்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லியாம். இன்னும் தேடிகிட்டு இருக்காங்க. John Man தான் படிச்ச விஷயங்களை வெச்சு, தானாகவே அந்த இடத்தை தேடி அலைகிறார். இந்த அனுபவங்கள் Resurrection செக்‌ஷனில் கொஞ்சம் இழுவையாக Travelogue மாதிரி இருக்கு.

ஒரு சின்ன காட்டுமிராண்டி கூட்டம், அதுல வளர்ந்த பொடியன், உலகத்துலயே மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி - Big Daddy சீனா-வை புரட்டிப்போட்டவன் Genghis!
அலெக்ஸாண்டர்-ஐ எல்லாம் விட பல மடங்கு சாதிச்சவன். எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்.

Genghis Khan-க்கு பெத்தவங்க வெச்ச பேருதான் Temujin!

2 comments:

கருப்பன் (A) Sundar said...

கெங்கிஸ் கான் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். Ensemble Studios Age of Empires II கேமில் கெங்கிஸ் கானின் படைகளை வழிநடத்தியிருக்கிறேன். The Shadow போன்ற ஆங்கிலப் படங்களிளும் சில குறிப்புகளை கேட்டிருக்கிறேன். நல்ல பெயர் தேர்ந்தெடுத்துள்ளீர்!

தெமுஜின்/Temujin said...

பிபிசி-யின் Genghis Khan படத்தில் கூட அவன் சீனா-வை வீழ்த்தியதுபற்றி விபரமாக சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி்.