மதியம் செவ்வாய், பிப்ரவரி 12, 2008

எழுந்து நில்லடி என் கண்ணு!

'குரங்கு மாதிரி இங்கயும் அங்கயும் தாவாம ஒரு எடத்துல நில்லேண்டா!' என்று நம் அம்மாக்களைப் போல யாரு கோவிச்சு கேட்டாங்களோ - 3,6 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி திடீர்னு சில பேர் ரெண்டு கால்களில் எழுந்து நின்னாங்க!

“பாய்ந்தானே ஹனுமான்!” என்பது போல “எழுந்து நின்றானே Australopithecus afarensis". இந்த புரட்சி கூட்டம் குரங்கும் மனிதனும் இனம்வாரியாக பிரியும் முன் தோன்றி ரெண்டுபேருக்கும் பொதுவானவர்கள். அதனாலதான், இன்னிக்கும் சில குரங்கு குடும்பங்கள் ரெண்டு கால்களில் எழுந்து நிக்கிறாங்க. இதுல Chimpanzees-ஐ நிறைய பாக்கலாம்.

தொல்பொருள் ஆராய்ச்சி வரலாற்றில் ரொம்ப முக்கியமானதாக கருதப்படும் இந்த கண்டுபிடிப்பு நடந்தது 1978ல். டான்சானியாவில் லயெடொலி (Laetoli) என்கிற இடத்தில தோண்டிகிட்டிருந்தவங்க கண்ணுல வித்தியாசமான ஒரு குரங்குகோட கால்தடம் மாட்டிச்சு. பக்கத்துல இருந்ததெல்லாம் - குரங்கு, யானை, காண்டாமிருகம் - போன்ற மிருகங்களின் கால்தடங்களே. ஆனால் இதுல மட்டும் கட்டை விரல் அச்சு மத்த விரல்களோடு வரிசையாக இருந்தது. ‘பெருசா எதோ மாட்டிடுச்சுடா இன்னிக்கு!'-னு அந்த மொத்த இடத்தயும் ஒன்னுக்கு ரெண்டு முறை நோட்டம்விட்டு அத்தனை விவரங்களையும் குறிச்சுகிட்டாங்க. டெண்டு-க்குப் போய் பார்த்து அசந்துபோயிருக்காங்க.

அவங்க கண்டது BiPedalism. இனத்தின் பெயர் A. afarensis.

நிற்க.

Australopithecus afarensis
இந்த பேரை வெச்சது 1974-ஆண்டில். எதியோபியா-வுல ஹாடார் (Hadar) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புது இனம். அன்னிக்கு கிடைத்தவள் (செல்லப்பேரு Lucy), ரெண்டு கால்களால் நடக்கக்கூடியவள்னு சொல்லும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கல. பின்னர் கிடைத்த தடயங்களை வெச்சு இவளும் லயெடொலி-யில் கிடைத்தவையும் ஒரே இனம்னு தெரிஞ்சது.




சரி, லயெடொலி-யில் கிடைச்ச புதையலை வெச்சு அவங்க சொல்ற கதை இன்னும் ஆச்சரியமானது



படம் பாருங்க.




















சுமார் 3,6 மில்லியன் வருஷங்களுக்கு முன், இதே லயெடொலி-யில் இருந்த ஒரு எரிமலை வெடித்தது. எரிமலை துப்பிய லாவா எல்லாம் சாம்பலாக மாறி சுத்தி எல்லா இடத்திலயும் கடல்மணல் போல பரவியது. அப்புறம் பெஞ்ச மழையில் ஈரமான சாம்பல், sticky சிமெண்ட் கலவை மாதிரி ஆனது. அந்த சமயம் அந்த வழியாக கடந்து சென்ற சில மிருகங்களுடன் நம்ம பாட்டன்கள் - மூன்று A. afarensis-உம் - நடந்து போயிருக்காங்க. அதுல ஒருத்தர் ஒரு இடத்துல நின்னு திரும்பி பார்த்திருக்கிறார்-னு கூட சொல்கிறார்கள்! இவங்க போனபிறகு அடிச்ச சுட்டு வெயிலில் கால்தடங்கள் எல்லாம் காஞ்சுபோக, இன்னுமொரு layer சாம்பலும் பரவ, தடங்கள் எல்லம் அழியாமல் காக்கப்பட்டிருக்கு.

ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அடிப்படையில் மைக்கெல் ஹேகல்பெர்க் வரைந்த அந்த காட்சிதான் மேலே கொடுக்கபட்டுள்ளது.

"நல்லா சொல்லுறாங்கய்யா Detail-u!!" வடிவேலு டயலாக் நியாபகத்துக்கு வர - அந்த காலத்திற்கு, அந்த இடத்திற்கு நானும் பயணிச்சு வியந்துபோறேன்.


பெயர்: Australopithecus afarensis

வயசு: 3,9 - 3 மில்லியன்

புவ்வா: பழம், வேர்தண்டுகள், கடலை வகைகள்

பால்: ஆண் / பெண்

சூழல்: ஏரி, புல்வெளிகளுடன் கூடிய மரக்காடுகள்

சிறப்பு: கால் கட்டை விரல் மற்ற விரல்களோடு சம வரிசையில் காணப்படுவது.

தோன்றி வளர்ந்த இடம்: எதியோபியா, டான்சானியா






becominghuman.org இணையதளத்துல ஒரு interactive ஃப்ளாஷ் டாகுமெண்டரி வெச்சிருக்காங்க. மனித evolution பற்றி ரொம்ப சுவையா, விவரமா சொல்லிருக்காங்க. தோற்றம், வளர்ச்சி, emigration, மற்ற parallel humanoid இனங்கள், அவர்கள் அழிஞ்சுபோகக் காரணங்கள் இப்படி நிறையா இருக்கு. 2 மணி நேரம் பிடிக்கும். முடிஞ்சா பாருங்க.

2 comments:

தெமுஜின்/Temujin said...

தமிழ்மணத்தில் தெரிகிறதா என்று பார்க்க பின்னூட்ட சோதனை.

Anonymous said...

boondhi.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading boondhi.blogspot.com every day.
payday loans ontario
payday advance