ரொம்ப பரபரப்பான நேரம் அது. இந்த ஐம்பது வருஷத்துல நடந்த நிகழ்ச்சிகள் ஒன்னொன்னும் கண்ணுல ஒத்திக்கிர ரகம். அப்பதான் Darwin தாத்தா கலாபகோஸ் எல்லாம் சுத்திட்டு “Origin of Species" வெளியிட்டிருந்தார். நம்ம சொந்தகார பயலுக Neanderthal எல்லாம் மண்ணுக்குள்ளேந்து வெளிய எடுக்கப்பட்டதோடு மட்டும் இல்லாமல், நம்மளோட பரிணாம வளர்ச்சி பத்தி ஆராய்ச்சிகள் கிடுகிடுனு நடந்துகிட்டிருந்த காலங்கள் அதெல்லாம்.
ஒரு சனிக்கிழமை, 1912-ஆம் வருஷம், Sussex, இங்கிலாந்து:
“பாத்து செய்யுங்கண்ணே! ரெண்டாவது பல்லு இன்னும் கொஞ்சம் சீவி விடனும்-னு நினைக்கிறேன். அப்புறம், அந்த மண்டை ஓடு கொஞ்சம் வழு வழுன்னு இருக்கு பாருங்க. அதயும் கொஞ்சம் தேய்ங்க.”
“என் வேலைய நான் பாத்துக்கறேன். நீ Hargreaves-ஐ கடப்பாரை எடுத்துகிட்டு நான் சொன்ன இடத்துக்கு திங்கக்கிழமை வந்துட சொல்லு, புரியுதா? அவன் பாட்டுக்கு மப்புல விழுந்து கிடக்கப்போறான்.”
“அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா...இந்த Pycraft-தான் சந்தேக கேஸுங்க. நம்ம நேரம், அவன் எதாவது சந்தேகப்படாம இருக்கனுமே!”
“Nah! அவனுக்கெல்லாம் மனுஷ உடலமைப்பு பத்தி அரைகுரையாத்தான் தெரியும். ஆள விட்டா போதும்னு ஓடப்போரனுங்க பாரு.”
கத்தி, பிளேடு, கையுறை, இப்படி பட்டறை பொருட்கள் அனைத்தையும்
உள்ள பதுக்கிவெச்சுட்டு வந்தார்கள் ரெண்டு பிரிட்டிஷ் Natural History Museum வல்லுனர்கள். ஒருவர் Charles Dawson, புது அப்பாயிண்ட்மெண்ட் தொல்பொருள் ஆய்வாளர். மற்றவர் Sir Arthur Smith Woolward, பொருப்பாளர்.
----------------------
முந்தைய பதிவுல நாம் பார்த்தது தொல்பொருள் உலகின் நெ.1 கண்டுபிடிப்பு.
இது, அறிவியல் உலகின் நெ.1 வெக்கக்கேடு என்று இன்றைக்கும் கருதப்படுகின்ற ஒரு மோசடிச்செயல்.
அந்த காலத்துலயே ரூம் போட்டு யோச்சிருப்பாங்களோ-னு சந்தேகப்பட வைக்கிர மாதிரி இருக்கு. Charles Dawson, Piltdown Quarry பக்கம் ஒரு நாள் போயிட்டிருந்தப்போ ஒரு கூலித்தொழிலாளி ஓடி வந்தான். வேலை செஞ்ச இடத்துல எதோ எலும்பெல்லாம் கிடைச்சுது-னு சொல்ல, நண்பர் Woolward-ஐயும் கூட்டுகிட்டு போகிறார் Charles.
அட! நிஜமாவே மனுஷ எலும்புதானோ? மேலும் தோண்ட, சில பல மிருகங்களின் பல் அச்சுகள், கால் எலும்பு, ஒரு தாடை எலும்பு, மண்டை ஓட்டு துண்டுகளும் கிடைச்சுது. மனுஷன் மனுஷனா மாறியதுக்குத் தேவையான Missing Link அத்தாட்சி கையுல இருக்கு-னு Dawson வெளி உலகத்துக்கு அறிவிக்க, தொல்பொருள் உலகமே ஒரு நிமிஷம் திரும்பி பார்த்தது!
Eoanthropus dawsoni-னு தன்னோட பெயரையே வெச்சு அழகுபார்த்தார் Dawson. மண்டை ஓடு துண்டுகளையும், தாடை எலும்பையும் சேர்த்து Eoanthropus dawsoni உருவாக்கியாச்சு. அந்த கால அறிவியல் உலகில், ஆதி மனித இனம் குரங்குளைப்போல பெரிய மண்டையையும், நீண்ட தாடையையும் கொண்டிருந்தது என்ற கருத்து இருந்தது. சொல்லிவெச்சாப்போல, அதே அடிப்படையில் அமைந்திருந்தது Piltdown Man (dawsoni-இன் பொதுப்பெயர்).
ஆரம்பத்துலயே, அமெரிக்கர்களும் மத்தவங்களும் எதோ ஒன்னு இடிக்குதே என்று குறை சொல்லி வந்தார்கள். பிரிட்டனில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு நடந்தது பொறுக்காமதான் இப்படியெல்லாம் பேசுகிறார்களோ-னு நினைத்தார்கள் பிரித்தானியார்கள். அடுத்த வருஷமே, Woolward, Piltdown Man II-வை தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்தார்.
இடைப்பட்ட காலத்தில், தாடை எலும்பை X-கதிர் செலுத்தி பார்த்த Pycraft-க்கு பெரிசா எதும் தப்பு தெரியல. Dawson மற்றும் Woolward சொன்னதை ஆமோதித்தது போல இருந்தது அவரோட அறிக்கை.
1916-ஆம் வருஷம் Dawson இறந்தேபோனார்.
ஆனாலும், Piltdown Man பற்றிய ஆராய்ச்சிகளும் சர்ச்சைகளும் குறைந்தபாடில்லை.
சர்ச்சைக்கான முக்கிய காரணங்கள்:
1. தோண்டுதல் நடந்தபோது எந்த ஒரு நாட்குறிப்பும் எடுக்கப்படவில்லை. 6 மாதம் கழிச்சு திடீரென்று ஒரு நாள், எலும்புகள் காணப்பட்டது எத்தனை அடிகளில், எந்த விதமான மண் அடுக்குகள் (soil layers) இருந்தன போன்ற மிக முக்கியமான விவரங்களை வெளியிடுகிறார் Dawson!
2. ஒரே இடத்தில் இத்தனை விதமான விலங்கு, தாவர fossil-கள் கிடைப்பது அரிதிலும் அரிது. Piltdown Man-எலும்புகள் மட்டுமின்றி, யானை பல் அச்சு, beaver பல் அச்சு, சில புராதன கல் கருவிகள் போன்றவையும் கிடைத்தது.
3. யானையின் பல் அச்சுகளையும், மண் அடுக்குகளையும் வைத்தே Piltdown Man-இன் வயதை தீர்மானித்தது. (Dawson கணித்த மண்ணின் வயது தவறானது என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது!)
4. கிடைத்த மண்டை ஓட்டையும், தாடை எலும்பையும் வைத்து Woolward வடித்த முகத்திற்கும், Arthur Keith என்ற உடலமைப்பு நிபுணர் வடித்த முகத்திற்கும் இருந்த வித்தியாசங்கள்.
”You could make sense of human evolution if you didn't try to put Piltdown into it.”
- Sherwood Washburn (அமெரிக்க தொல்பொருள் நிபுணர்), 1950
எப்படி கண்டுபிடித்தார்கள்?
1. 1949 - புதிய Flourine Absorption பரிசோதனையில், fossil-கள் அனைத்தும் சமீபத்தியவை என்று நிரூபணமாகியது.
2. 1951 - Edmonds (மண்ணியல் நிபுணர்), Dawson கணித்த மண் அடுக்குகளின் வயது பிழையானது என்ற தன் அறிக்கையை வெளியிட்டார்.
3. 1953 - செய்யப்பட்ட X-கதிர் மற்றும் Microscopy சோதனையில், தாடை எலும்பில் இருந்த பற்கள் இரும்பினால் அறுக்கப்பட்டுள்ளன என்று அப்பட்டமாக தெளிவானது.
4. மேலும், தாடை எலும்பு Orang-utan இனத்திற்கானது என்றும், பல்வேறு கெமிக்கல் கலவைக்குப்பிறகு இணைக்கப்பட்டுள்ளன என்றும் நிரூபிக்கப்பட்டது!
இறுதியாக, 1953-ஆம் வருஷம் Piltdown மெகா மோசடி என்று J.S. Weiner, Sir Kenneth Oakley மற்றும் Sir Wilfrid Le Gros ஆகியோர் சேர்ந்து தீர்மானித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
கொசுறு தகவல்: The Lost World எழுதிய Sir Arthur Conan Doyle, Dawson-னின் எதிர்வீட்டுக்காரர். அவரும் அவ்வப்போது தோண்டுதல் பணிகளில் உதவியுள்ளார்.
சுட்டிகள்:
Natural History Museum
Richard Harter's Piltdown Man
Piltdown Plot - ஸ்கேன் செய்யப்பட்ட அசல் ஆவணங்களும், அறிக்கைகளும்
ஏமாற்ற நல்ல டைம்!
Labels: தொல்பொருள், வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆகா! ரூம் போட்டு ஏமாத்தி இருக்கானுங்களா?
போலி சாமியார் மாதிரி போலி சைண்டிஸ்ட்டா!
நல்லா சுவாரஸ்யமா எழுதறீங்க. வரலாறுகூட கொஞ்சம் புரியற மாதிரி முதல்முறையா தெரியுது!
போலிதான் சுரேஷ்! ஆனா, Dawson, Woolward இருவரும் வெளிஆட்கள் இல்ல. உலக பிரசித்தி பெற்ற Natural History Museum-ல் வேலை செஞ்சு கொண்டிருந்தவர்கள் என்பதுதான் இதில் அதிர்ச்சி.
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
தங்கள் வரலாற்று அறிவு வியக்கத்தக்கது! தொடர்ந்து எழுதுங்கள்.
கருப்பன், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இணையத்திலும், புத்தகங்களிலும் நான் படித்தவையே இங்கு இடம்பெற்றுள்ளன. இணைத்துள்ள சுட்டிகளை பார்க்கவும்.
Post a Comment