பாண்டியனா கொக்கா?

Basileion Pandionis Modoura - என்று Ptolemy பாண்டிய தலைநகரை குறிப்பிடுகிறார். கடல்தாண்டி இந்தியாவோடு வணிகம் செய்த கிரேக்க மற்றும் எகிப்திய வியாபாரிகளும், யாத்திரிகர்களும் கூறியதன் அடிப்படையில் இப்படி எழுதியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. Ptolemy எழுதிய காலம் 140 C.E. இவருக்கு முன்பே பாண்டிய நாட்டின் முத்துக்களையும், 'muslin' எனும் மெல்லிய துணிகளையும் வாங்கி 'ஆதென்ஸ்' மாநகர கடைகளில் விற்று லாபமடைந்திருக்கிறார்கள் பல வணிகர்கள்.

வியாபாரம் மட்டுமின்றி கலாச்சார பரிமாற்றங்களும், இந்திய தத்துவச் சிந்தனைகளும் நிறைய 'ஆதென்ஸ்'-க்கும் குறிப்பாக Augustus-ன் தர்பார் வரைக்குமே பரவி அங்கிருந்தவர்களை ஓரிரு சந்தர்பங்களில் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது. இதுபற்றி பின்னர் பார்ப்போம்.

பாரசீக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஆரம்பகாலத்திலிருந்தே தொடர்பு இருந்துவந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் King Solomon காலத்திலிருந்து அதிகரித்திருக்கிறது. அவர்கள் மயில் தோகைகளை அதிகம் விரும்பி வாங்கிச்சென்றுள்ளனர். வணிகப்பொருட்கள் பட்டியலில் 'tūki' என்ற சொல் ‘தோகை'யை குறிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், Solomon தர்பாரை சித்தரிக்கும் ஓவியங்களிலும் மயில்களும், தோகைகளும் இடம்பெற்றுள்ளன.

கிரேக்க காலங்கள் வரை இந்தியாவை அடைந்தவர்களெல்லாம், கடற்கரையை ஒட்டியே தங்கள் கப்பல் வழியை அமைத்துக்கொண்டனர். வழிநெடுக இருந்த பல்வேறு ஊர்களிலெல்லாம் வணிகமுகாம்கள் அமைத்தும் இருந்தனர். Hippalus என்ற ஒரு மாலுமி/வணிகர் (1 C.E) முதல்முறையாக, தைரியமாக, தென்மேற்கு பருவக்காற்றுள் தன் கப்பலை செலுத்தினார். இறுதியில், ஒரு வழியாக, அவர் தென்இந்திய எல்லையை அடைந்தாராம். இதன்மூலம் எகிப்துக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்யும் நேரம் அதிகளவு மிச்சமானதால் வணிகம் செழித்தது.

கிரேக்க குறிப்பேடுகளில் முக்கியமாக இடம்பெற்றுள்ள இரண்டு இடங்கள்: கன்னியாகுமாரி மற்றும் கொற்கை. 'Periplus Maris Erythraei' எனும் கிரேக்க கடற்பிரயாண கையேடு, கன்னியாகுமாரியை பற்றி “Comari என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கேயே, Cape of Comari மற்றும் ஒரு துறைமுகமும் இருக்கிறது” என்று குறிப்பிடுகிறது. மேலும், ”குடும்பத்தை துறந்து துறவறம் பூண்ட ஆண்களும் பெண்களும் இக்கடற்கரையில் புனித நீராடி தங்குகின்றனர். ஒரு காலத்தில் பெண் தெய்வம் ஒன்று இதேபோல குளித்து இங்கே தங்கியதாக சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடுவதன் மூலம் குமாரி அம்மனைப்பற்றியும் அங்கிருக்கும் கோயிலைப்பற்றியும் கூறுவது தெளிவாகிறது.

பாண்டிய மன்னனை Pandion/Pandae/Pandyon என்று பலவிதமாக குறிப்பிடும் கிரேக்க ஏடுகள், கொற்கை என்ற ஒரு வணிக துறைமுகம் பற்றியும் கூறுகிறன. “தெற்கே Comari கொண்ட நாடு, வடக்கே Colchi என்ற கடற்கரை துறைமுகத்தையும், அதனுடன் இணைந்த வளைகுடாவையும் உள்ளடக்கியது. Colchi-யில் முத்து எடுக்கும் தொழிலும், முத்துப்பண்ணைகளும் அதிகம் நடந்துவருகிறது. அத்தொழிலில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று 'Periplus' விவரிக்கின்றது. Ptolemy 'Kolkhoi' என்று குறிப்பிடுகிறார்.

கொற்கை, இன்றைக்கு, தூத்துக்குடிக்கு தென்மேற்கே கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர்கள் உள்ளே விலகி இருக்கின்ற ஒரு சின்ன கிராமம். ஆனால், கொற்கையில் கிரேக்க மன்னன் Augustus காலத்து காசுகளும், பானைகளும், வடஇந்திய Maurya அரசாங்க பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ”செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தாமிரபரணி ஆறு பழங்காலங்களில் கொற்கையை ஒட்டி வடக்கே சென்று தூத்துக்குடி அருகே கடலோடு சேர்ந்தது” என்று Current Science பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை நிருபித்துள்ளது.

சரி, பாண்டியனுக்கு மேற்கு கடற்கரையில் ஒன்றுமே இல்லியா என்றால், அதற்கும் பதில்தரும் விதமாக Neacynda என்ற ஒரு துறைமுகத்தை குறிப்பிடுகிறார் Pliny The Elder (23 – 79 C.E). இவர் எழுதிய Naturalis historia எனும் களஞ்சியத்தில், “Neacynda எனும் துறைமுகம் Porakad பகுதியில் உள்ளது. இது Pandion மன்னனின் ஆட்சியின் கீழ் விளங்கி வருகிறது. Pandion-னின் தலைநகரமான Madura கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது” என்று கூறுகிறார். இன்று அழிந்துவிட்ட Nelcynda எனும் பழங்கால துறைமுகம் தற்கால கேரளாவிலுள்ள செங்கனூர்-க்கு அருகில் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

Augustus தர்பாரில் ஆச்சரியப்படுத்திய இந்தியர்களைப் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேனே? அது என்ன? ”13 C.E-யில் Augustus மன்னருக்கு பாண்டியன் எனும் இந்திய அரசன் ஒரு தூதர் கூட்டத்தை அனுப்பி தன் நட்பை வெளிப்படுத்தினான். அவர்களுடன் இருந்த ஒரு இந்திய தத்துவஞானி மந்திரிகள் கூட்டத்தின் நடுவே தன் நம்பிக்கைகளை நிரூபிக்கும் பொருட்டு ஒரு தீக்குண்டத்தை வளர்த்து அதிலேயே தன்னை இட்டு மாய்த்துக்கொண்டார்!” என்று Strabo (64 B.C.E – 24 C.E) எனும் கிரேக்க வரலாற்று நிபுணர் தன் குறிப்பீடுகளில் தெரிவிக்கின்றார். அந்த இந்தியரை “sramana" தத்துவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்று சில தற்கால நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படியோ, முதலாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு ஒரு bustling ராஜ்ஜியமாக, இந்தியாவையும் தாண்டி தன் சிறகுகளை விரித்திருந்தது என்று விளங்குகிறது.

சுட்டிகள்:
History of Tinnevelly (Bishop R. Caldwell)
History of India from the Early Ages (James Talboy Wheeler)
Ptolemy எழுதிய Tetrabiblos (ஆங்கிலம்)
Strabo-வின் Geography (ஆங்கிலம்)
இந்தியாவுடனான ரோமானிய வணிகம்
Periplus Maris Erythraei (ஆங்கில மொழியாக்கம்)
கொற்கை பற்றிய ஒரு பயணக்கட்டுரை
Neacynda பற்றிய செய்தி
Berenice (இந்தியா - கிரேக்க/ரோமானிய வணிகத்தில் முக்கியமான எகிப்து நாட்டு துறைமுகம்)

என்ன கொடுமை சரவணன் இது!

தஞ்சாவூரை மையமாகக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையில் நடந்த சண்டைக்காட்சிகள், தஞ்சையில் கைப்பொம்மை ஆட்சி நடத்திவந்த சரபோஜி மன்னரது அறிவுப்பசியின் காரணத்தால் அவர் சேகரித்த பலவிதமான ஐரோப்பிய புத்தகங்கள் (ஆங்கிலத்தில் மனித உடலமைப்பு, ஜெர்மன் அகராதி) என சுவையான பொக்கிஷங்களை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திலுள்ள காட்சியகத்தில் காணலாம். அவற்றுடன் சில விஷமமான வரைபடங்களும் கண்ணில்பட்டன.

அப்படங்களில் பாவப்பட்ட கைதிகளை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. கழுத்து மற்றும் கை சுற்றிலும் சங்கிலி, மேலும் தடிச்சங்கிலியால் உடலோடு இணைக்கப்பட்ட பாறாங்கல் என நிறைய கொடுமைப்படுத்தும் விதங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கே இருந்தவற்றுள் சில சித்திரவதைக்கலையின் உச்சம்! இவையெல்லாம் பழங்கால சீனா-வில் தண்டனைகளாக வழக்கத்திலிருந்த முறைகள் என்று ஒருவர் விளக்கினார்.

'Tomorrow Never Dies' திரைப்படத்தில் வில்லனிடம் பிடிபட்ட பாண்டை கொடுமைப்படுத்தப் போவதாக மிரட்டி சில மேட்டர்களை காட்டுவார்களே! அதுமாதிரி அணுவணுவாய் சித்திரவதை செய்ய கையாளப்படும் இம்முறைகளை கவனித்தபோது, இத்தகைய arcane விஷயங்களில் சீனா பழங்காலத்திலிருந்தே சித்திரவதைக் கலையில் ஆராய்ச்சி செய்துவந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது.

ரெண்டு காலையும் சேர்த்து வைக்கவே இடம் பெராத அளவுக்கு ஒரு சின்ன கூண்டு, அதுக்குள்ள ஒரு ஆளை பணியவெச்சு மூடிவிட்டிருந்தார்கள்! திருச்செந்தூர் செந்திலாண்டவர் சன்னதிக்குப் பின்னாடி ஒரு சின்ன பாதைக்குள் போனால் பஞ்சலிங்கம் இருக்குமே!, அந்த பொந்துக்குள் ஒரு நிமிஷம் குனிஞ்சு போயிட்டு வரத்துக்குள்ளயே தாவு தீர்ந்துபோன எனக்கு இதையெல்லாம் பார்த்தபோது இந்தியா நிஜமாவே 'புண்ணிய பூமி'-தான் என்று தோன்றியது.



















மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒரு செயல்முறை: The Water Torture. கைதியை படுக்கப்போட்டு அசைய முடியாதபடி கட்டிவிட்டு, அவன் நெற்றியின் மேல் சிறு சிறு இடைவேளைகளில் தண்ணீர் துளிகளை ஒவ்வொன்றாக சொட்டச் செய்வது! இதை உங்க வீட்டுல செஞ்சுபார்த்துட்டு ‘அப்படி ஒன்னும் பெரிசா இல்ல'-னு சொல்லாதீங்க. படிப்பதற்கு சாதாரணமாக (!) தோன்றினாலும், சற்று சிந்தித்துப்பார்த்தால், விடாது சொட்டும் தண்ணீர் துளிகளால் ஏற்படக்கூடிய மன உளைச்சலை நினைக்கவே பயமாக இருக்கிறது. தண்ணீர் சொட்டுவதால் ஏற்படும் எரிச்சல், அதுக்கு மேல கை காலை அசைக்கமுடியாத நிலை, இதுக்கெல்லாம் மேல, நம்ம கை கால்களை அவிழ்த்துவிட யாருமே வரமாட்டாங்க என்கிற நினைப்பையும் சேர்த்துக்கொண்டு யோசித்தால் விபரீதம் புரியும்!



இந்த கொடுமையெல்லாம் மூன்றாம் நூற்றாண்டின் 'ஜின்' அரசாட்சியிலேயே (265 - 420) பயன்பாட்டில் இருந்தன. மேலும், மூச்சு விடமுடியாத அளவுக்கு ‘கிச்சு கிச்சு Torture' வகைகளும் இருந்தது. இதில் ஒரு improvisation - கிச்சு அண்ட் அரிப்பு combo! கிச்சு மூட்டிவிட்டு அடுத்து காலில் பயங்கர அரிப்பு ஏற்படுத்தக்கூடிய சில சமாசாரங்களை தேய்த்துவிடுவது. அது ஓய்ந்ததும், மறுபடியும் பல்லெல்லாம் கொட்ட கிச்சு கிச்சு!

சவுக்கு மரம் அதிகம் விளைந்ததால் வந்த வினை - ‘சவுக்கு அடி'. மெல்லிய சவுக்கென்றால் 10 முதல் 50 விளாசல்கள். தடி சவுக்கு தண்டனை 100-ஐத் தொடும். வெவ்வேறு தவறுகளுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கு அடி எண்ணிக்கையை பார்ப்போமா?
1. சட்டப்படி தீர்ப்பு வழங்காத நீதிபதி - 30
2. தீ விபத்தின்போது உதவாமல்/தெரிவிக்காமல் இருந்தால் - 20
3. மப்புல மூணாவது மனுஷன் வீட்டுக்குள் ராத்திரி நுழைந்தால் - 40
4. கன்னா பின்னாவென்று கண்டவர் மீது அம்பு விட்டால் - 60
5. கடனை அடைக்கத் தவறினால் - 60
6. சூதாட்டம் - 100 (இதில் பணயப்பொருள் உணவு அல்லது தண்ணீர் என்றால் விலக்கு. மேலும் ஆட்டம் வில்வித்தை அல்லது martial arts என்றாலும் விலக்கு உண்டு)

இதையெல்லாம் ‘டாங்' அரசின்போது (618 - 907) சட்டபுத்தகங்களிலேயே ஏற்றிவைத்தார்கள். இந்த கொடுமைகள், உடல் உள்ளம் இரண்டையுமே துன்புறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவையே! அதிலும், நான் குறிப்பிடாத பல முறைகள், கைதிகளின் பிறப்பு உறுப்புக்களுடன் தொடர்புடையவை! பெரும்பாலானவற்றின் இறுதி விளைவு, கைதிகளின் பரிதாப இறப்பில்தான் முடிந்தது என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

இம்மாதிரி கொடுமைகள் இந்த காலத்தில் கூட நவீனமயமாக்கப்பட்டு அந்நாட்டு அரசு வழக்கத்தில் இருக்கின்றனவோ என்னவோ!

இணைக்கப்பட்டுள்ள படங்கள் 18ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு புத்தகத்திலிருந்து எடுத்தவை.

ஏமாற்ற நல்ல டைம்!

ரொம்ப பரபரப்பான நேரம் அது. இந்த ஐம்பது வருஷத்துல நடந்த நிகழ்ச்சிகள் ஒன்னொன்னும் கண்ணுல ஒத்திக்கிர ரகம். அப்பதான் Darwin தாத்தா கலாபகோஸ் எல்லாம் சுத்திட்டு “Origin of Species" வெளியிட்டிருந்தார். நம்ம சொந்தகார பயலுக Neanderthal எல்லாம் மண்ணுக்குள்ளேந்து வெளிய எடுக்கப்பட்டதோடு மட்டும் இல்லாமல், நம்மளோட பரிணாம வளர்ச்சி பத்தி ஆராய்ச்சிகள் கிடுகிடுனு நடந்துகிட்டிருந்த காலங்கள் அதெல்லாம்.


ஒரு சனிக்கிழமை, 1912-ஆம் வருஷம், Sussex, இங்கிலாந்து:
“பாத்து செய்யுங்கண்ணே! ரெண்டாவது பல்லு இன்னும் கொஞ்சம் சீவி விடனும்-னு நினைக்கிறேன். அப்புறம், அந்த மண்டை ஓடு கொஞ்சம் வழு வழுன்னு இருக்கு பாருங்க. அதயும் கொஞ்சம் தேய்ங்க.”

“என் வேலைய நான் பாத்துக்கறேன். நீ Hargreaves-ஐ கடப்பாரை எடுத்துகிட்டு நான் சொன்ன இடத்துக்கு திங்கக்கிழமை வந்துட சொல்லு, புரியுதா? அவன் பாட்டுக்கு மப்புல விழுந்து கிடக்கப்போறான்.”

“அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா...இந்த Pycraft-தான் சந்தேக கேஸுங்க. நம்ம நேரம், அவன் எதாவது சந்தேகப்படாம இருக்கனுமே!”

“Nah! அவனுக்கெல்லாம் மனுஷ உடலமைப்பு பத்தி அரைகுரையாத்தான் தெரியும். ஆள விட்டா போதும்னு ஓடப்போரனுங்க பாரு.”

கத்தி, பிளேடு, கையுறை, இப்படி பட்டறை பொருட்கள் அனைத்தையும்
உள்ள பதுக்கிவெச்சுட்டு வந்தார்கள் ரெண்டு பிரிட்டிஷ் Natural History Museum வல்லுனர்கள். ஒருவர் Charles Dawson, புது அப்பாயிண்ட்மெண்ட் தொல்பொருள் ஆய்வாளர். மற்றவர் Sir Arthur Smith Woolward, பொருப்பாளர்.

----------------------

முந்தைய பதிவுல நாம் பார்த்தது தொல்பொருள் உலகின் நெ.1 கண்டுபிடிப்பு.

இது, அறிவியல் உலகின் நெ.1 வெக்கக்கேடு என்று இன்றைக்கும் கருதப்படுகின்ற ஒரு மோசடிச்செயல்.

அந்த காலத்துலயே ரூம் போட்டு யோச்சிருப்பாங்களோ-னு சந்தேகப்பட வைக்கிர மாதிரி இருக்கு. Charles Dawson, Piltdown Quarry பக்கம் ஒரு நாள் போயிட்டிருந்தப்போ ஒரு கூலித்தொழிலாளி ஓடி வந்தான். வேலை செஞ்ச இடத்துல எதோ எலும்பெல்லாம் கிடைச்சுது-னு சொல்ல, நண்பர் Woolward-ஐயும் கூட்டுகிட்டு போகிறார் Charles.

அட! நிஜமாவே மனுஷ எலும்புதானோ? மேலும் தோண்ட, சில பல மிருகங்களின் பல் அச்சுகள், கால் எலும்பு, ஒரு தாடை எலும்பு, மண்டை ஓட்டு துண்டுகளும் கிடைச்சுது. மனுஷன் மனுஷனா மாறியதுக்குத் தேவையான Missing Link அத்தாட்சி கையுல இருக்கு-னு Dawson வெளி உலகத்துக்கு அறிவிக்க, தொல்பொருள் உலகமே ஒரு நிமிஷம் திரும்பி பார்த்தது!


Eoanthropus dawsoni-னு தன்னோட பெயரையே வெச்சு அழகுபார்த்தார் Dawson. மண்டை ஓடு துண்டுகளையும், தாடை எலும்பையும் சேர்த்து Eoanthropus dawsoni உருவாக்கியாச்சு. அந்த கால அறிவியல் உலகில், ஆதி மனித இனம் குரங்குளைப்போல பெரிய மண்டையையும், நீண்ட தாடையையும் கொண்டிருந்தது என்ற கருத்து இருந்தது. சொல்லிவெச்சாப்போல, அதே அடிப்படையில் அமைந்திருந்தது Piltdown Man (dawsoni-இன் பொதுப்பெயர்).

ஆரம்பத்துலயே, அமெரிக்கர்களும் மத்தவங்களும் எதோ ஒன்னு இடிக்குதே என்று குறை சொல்லி வந்தார்கள். பிரிட்டனில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு நடந்தது பொறுக்காமதான் இப்படியெல்லாம் பேசுகிறார்களோ-னு நினைத்தார்கள் பிரித்தானியார்கள். அடுத்த வருஷமே, Woolward, Piltdown Man II-வை தோண்டி எடுத்துள்ளதாக அறிவித்தார்.

இடைப்பட்ட காலத்தில், தாடை எலும்பை X-கதிர் செலுத்தி பார்த்த Pycraft-க்கு பெரிசா எதும் தப்பு தெரியல. Dawson மற்றும் Woolward சொன்னதை ஆமோதித்தது போல இருந்தது அவரோட அறிக்கை.
1916-ஆம் வருஷம் Dawson இறந்தேபோனார்.

ஆனாலும், Piltdown Man பற்றிய ஆராய்ச்சிகளும் சர்ச்சைகளும் குறைந்தபாடில்லை.

சர்ச்சைக்கான முக்கிய காரணங்கள்:

1. தோண்டுதல் நடந்தபோது எந்த ஒரு நாட்குறிப்பும் எடுக்கப்படவில்லை. 6 மாதம் கழிச்சு திடீரென்று ஒரு நாள், எலும்புகள் காணப்பட்டது எத்தனை அடிகளில், எந்த விதமான மண் அடுக்குகள் (soil layers) இருந்தன போன்ற மிக முக்கியமான விவரங்களை வெளியிடுகிறார் Dawson!

2. ஒரே இடத்தில் இத்தனை விதமான விலங்கு, தாவர fossil-கள் கிடைப்பது அரிதிலும் அரிது. Piltdown Man-எலும்புகள் மட்டுமின்றி, யானை பல் அச்சு, beaver பல் அச்சு, சில புராதன கல் கருவிகள் போன்றவையும் கிடைத்தது.

3. யானையின் பல் அச்சுகளையும், மண் அடுக்குகளையும் வைத்தே Piltdown Man-இன் வயதை தீர்மானித்தது. (Dawson கணித்த மண்ணின் வயது தவறானது என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது!)

4. கிடைத்த மண்டை ஓட்டையும், தாடை எலும்பையும் வைத்து Woolward வடித்த முகத்திற்கும், Arthur Keith என்ற உடலமைப்பு நிபுணர் வடித்த முகத்திற்கும் இருந்த வித்தியாசங்கள்.

”You could make sense of human evolution if you didn't try to put Piltdown into it.”
- Sherwood Washburn (அமெரிக்க தொல்பொருள் நிபுணர்), 1950


எப்படி கண்டுபிடித்தார்கள்?
1. 1949 - புதிய Flourine Absorption பரிசோதனையில், fossil-கள் அனைத்தும் சமீபத்தியவை என்று நிரூபணமாகியது.

2. 1951 - Edmonds (மண்ணியல் நிபுணர்), Dawson கணித்த மண் அடுக்குகளின் வயது பிழையானது என்ற தன் அறிக்கையை வெளியிட்டார்.

3. 1953 - செய்யப்பட்ட X-கதிர் மற்றும் Microscopy சோதனையில், தாடை எலும்பில் இருந்த பற்கள் இரும்பினால் அறுக்கப்பட்டுள்ளன என்று அப்பட்டமாக தெளிவானது.

4. மேலும், தாடை எலும்பு Orang-utan இனத்திற்கானது என்றும், பல்வேறு கெமிக்கல் கலவைக்குப்பிறகு இணைக்கப்பட்டுள்ளன என்றும் நிரூபிக்கப்பட்டது!

இறுதியாக, 1953-ஆம் வருஷம் Piltdown மெகா மோசடி என்று J.S. Weiner, Sir Kenneth Oakley மற்றும் Sir Wilfrid Le Gros ஆகியோர் சேர்ந்து தீர்மானித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

கொசுறு தகவல்: The Lost World எழுதிய Sir Arthur Conan Doyle, Dawson-னின் எதிர்வீட்டுக்காரர். அவரும் அவ்வப்போது தோண்டுதல் பணிகளில் உதவியுள்ளார்.

சுட்டிகள்:
Natural History Museum
Richard Harter's Piltdown Man
Piltdown Plot - ஸ்கேன் செய்யப்பட்ட அசல் ஆவணங்களும், அறிக்கைகளும்

எழுந்து நில்லடி என் கண்ணு!

'குரங்கு மாதிரி இங்கயும் அங்கயும் தாவாம ஒரு எடத்துல நில்லேண்டா!' என்று நம் அம்மாக்களைப் போல யாரு கோவிச்சு கேட்டாங்களோ - 3,6 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி திடீர்னு சில பேர் ரெண்டு கால்களில் எழுந்து நின்னாங்க!

“பாய்ந்தானே ஹனுமான்!” என்பது போல “எழுந்து நின்றானே Australopithecus afarensis". இந்த புரட்சி கூட்டம் குரங்கும் மனிதனும் இனம்வாரியாக பிரியும் முன் தோன்றி ரெண்டுபேருக்கும் பொதுவானவர்கள். அதனாலதான், இன்னிக்கும் சில குரங்கு குடும்பங்கள் ரெண்டு கால்களில் எழுந்து நிக்கிறாங்க. இதுல Chimpanzees-ஐ நிறைய பாக்கலாம்.

தொல்பொருள் ஆராய்ச்சி வரலாற்றில் ரொம்ப முக்கியமானதாக கருதப்படும் இந்த கண்டுபிடிப்பு நடந்தது 1978ல். டான்சானியாவில் லயெடொலி (Laetoli) என்கிற இடத்தில தோண்டிகிட்டிருந்தவங்க கண்ணுல வித்தியாசமான ஒரு குரங்குகோட கால்தடம் மாட்டிச்சு. பக்கத்துல இருந்ததெல்லாம் - குரங்கு, யானை, காண்டாமிருகம் - போன்ற மிருகங்களின் கால்தடங்களே. ஆனால் இதுல மட்டும் கட்டை விரல் அச்சு மத்த விரல்களோடு வரிசையாக இருந்தது. ‘பெருசா எதோ மாட்டிடுச்சுடா இன்னிக்கு!'-னு அந்த மொத்த இடத்தயும் ஒன்னுக்கு ரெண்டு முறை நோட்டம்விட்டு அத்தனை விவரங்களையும் குறிச்சுகிட்டாங்க. டெண்டு-க்குப் போய் பார்த்து அசந்துபோயிருக்காங்க.

அவங்க கண்டது BiPedalism. இனத்தின் பெயர் A. afarensis.

நிற்க.

Australopithecus afarensis
இந்த பேரை வெச்சது 1974-ஆண்டில். எதியோபியா-வுல ஹாடார் (Hadar) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புது இனம். அன்னிக்கு கிடைத்தவள் (செல்லப்பேரு Lucy), ரெண்டு கால்களால் நடக்கக்கூடியவள்னு சொல்லும் அளவுக்கு சாட்சிகள் கிடைக்கல. பின்னர் கிடைத்த தடயங்களை வெச்சு இவளும் லயெடொலி-யில் கிடைத்தவையும் ஒரே இனம்னு தெரிஞ்சது.




சரி, லயெடொலி-யில் கிடைச்ச புதையலை வெச்சு அவங்க சொல்ற கதை இன்னும் ஆச்சரியமானது



படம் பாருங்க.




















சுமார் 3,6 மில்லியன் வருஷங்களுக்கு முன், இதே லயெடொலி-யில் இருந்த ஒரு எரிமலை வெடித்தது. எரிமலை துப்பிய லாவா எல்லாம் சாம்பலாக மாறி சுத்தி எல்லா இடத்திலயும் கடல்மணல் போல பரவியது. அப்புறம் பெஞ்ச மழையில் ஈரமான சாம்பல், sticky சிமெண்ட் கலவை மாதிரி ஆனது. அந்த சமயம் அந்த வழியாக கடந்து சென்ற சில மிருகங்களுடன் நம்ம பாட்டன்கள் - மூன்று A. afarensis-உம் - நடந்து போயிருக்காங்க. அதுல ஒருத்தர் ஒரு இடத்துல நின்னு திரும்பி பார்த்திருக்கிறார்-னு கூட சொல்கிறார்கள்! இவங்க போனபிறகு அடிச்ச சுட்டு வெயிலில் கால்தடங்கள் எல்லாம் காஞ்சுபோக, இன்னுமொரு layer சாம்பலும் பரவ, தடங்கள் எல்லம் அழியாமல் காக்கப்பட்டிருக்கு.

ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அடிப்படையில் மைக்கெல் ஹேகல்பெர்க் வரைந்த அந்த காட்சிதான் மேலே கொடுக்கபட்டுள்ளது.

"நல்லா சொல்லுறாங்கய்யா Detail-u!!" வடிவேலு டயலாக் நியாபகத்துக்கு வர - அந்த காலத்திற்கு, அந்த இடத்திற்கு நானும் பயணிச்சு வியந்துபோறேன்.


பெயர்: Australopithecus afarensis

வயசு: 3,9 - 3 மில்லியன்

புவ்வா: பழம், வேர்தண்டுகள், கடலை வகைகள்

பால்: ஆண் / பெண்

சூழல்: ஏரி, புல்வெளிகளுடன் கூடிய மரக்காடுகள்

சிறப்பு: கால் கட்டை விரல் மற்ற விரல்களோடு சம வரிசையில் காணப்படுவது.

தோன்றி வளர்ந்த இடம்: எதியோபியா, டான்சானியா






becominghuman.org இணையதளத்துல ஒரு interactive ஃப்ளாஷ் டாகுமெண்டரி வெச்சிருக்காங்க. மனித evolution பற்றி ரொம்ப சுவையா, விவரமா சொல்லிருக்காங்க. தோற்றம், வளர்ச்சி, emigration, மற்ற parallel humanoid இனங்கள், அவர்கள் அழிஞ்சுபோகக் காரணங்கள் இப்படி நிறையா இருக்கு. 2 மணி நேரம் பிடிக்கும். முடிஞ்சா பாருங்க.

ஏன், யாரு தெமுஜின்?

சென்னை Landmark புத்தகக் கடையில் சினிமா செக்‌ஷன்ல சுத்திகிட்டிருந்தபோது கண்ணுல பட்டது Genghis Khan - Life, Death and Resurrection.

இடம்மாறி கிடந்த அந்த புத்தகத்தை ஒரு நிமிஷம் புரட்டினேன். புக்கோட ஆசிரியர், எழுத்தாளர் John Man, Genghis விட்டுச்சென்ற பாரம்பரியத்தையும், அவனது ஆட்சி் ஏற்படுத்திய தாக்கத்தையும் ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான எழுத்துநடையாலும் அவன் வாழ்ந்த இடங்களுக்கும் காலத்துக்குமே என்ன கூட்டிகிட்டுப்போன மாதிரி இருந்தது. விலை 275ரூ. சீப்பா இருக்கவே, சேஃபா வாங்கினேன்.

ஹிஸ்ட்ரி-னாலே ஸ்கூல் டேஸ்ல முக்கால்வாசி பேர் மாதிரி எனக்கும் செம தூக்கம்தான் வரும். ஆனா, இந்த புக்குக்கு அப்புறம் எல்லாம் மாறிப்போச்சு.

ISBN-13: 978-0312366247Life & Death செக்‌ஷன்களில் Genghis வாழ்க்கையப் பத்தி ரொம்ப detailed-ஆ கொடுத்திருக்காரு. ஒரு பக்கம் அவனது Barbaric அணுகுமுறையும், அவனோட படைகள் செஞ்ச அநியாயங்களைப் பத்தியும் சொன்னாலும், மறுபக்கம் எல்லா மதங்களின் மேல் அவனுக்கிருந்த Open-minded approach போன்ற அவனது நவீன அரசியல் தத்துவங்களைப் பற்றியும் நிறையா சொல்லியிருக்கார்.

Genghis சென்ற இடங்களுக்கெல்லாம் போய், மிச்சம் இருக்கிற சிதிலமான அடையாளங்களை எல்லாம் சூப்பர் படங்களாக இணைச்சிருக்கார்.

ஐரோப்பாவுக்கும் ஒரு 'காட்டு' காட்டிட்டுத்தான் போயிருக்கு அவன் படைகள். ரஷ்யா, போலந்து, ஹங்கேரி எல்லாமே அவனால் 'ரிவிட்' அடிக்கப்பட்டவர்கள். இன்னிக்கும் ரஷ்யர்களுக்கு அவன் பேரக்கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே-னு கேள்வி.

மங்கோலியாவுல, of course, அவன் கடவுள். ஆனா, அவன் செத்தபிறகு புதைக்கபட்ட இடம் இன்னிவரைக்கும் கண்டுபிடிக்கப்படவே இல்லியாம். இன்னும் தேடிகிட்டு இருக்காங்க. John Man தான் படிச்ச விஷயங்களை வெச்சு, தானாகவே அந்த இடத்தை தேடி அலைகிறார். இந்த அனுபவங்கள் Resurrection செக்‌ஷனில் கொஞ்சம் இழுவையாக Travelogue மாதிரி இருக்கு.

ஒரு சின்ன காட்டுமிராண்டி கூட்டம், அதுல வளர்ந்த பொடியன், உலகத்துலயே மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி - Big Daddy சீனா-வை புரட்டிப்போட்டவன் Genghis!
அலெக்ஸாண்டர்-ஐ எல்லாம் விட பல மடங்கு சாதிச்சவன். எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்.

Genghis Khan-க்கு பெத்தவங்க வெச்ச பேருதான் Temujin!

கடை விரிச்சாச்சு!

Hi Hi Hi Hi Hi!

ஏதோ தைரியத்துல என்னோட ஸ்வீட் ஸ்டாலை ஆரம்பிக்கிறேன். படிச்சுட்டு டேஸ்ட் சரியா இருக்கான்னு சொல்லுங்க.

நன்றி.

முதல் பதிவுங்கறதுனால கொஞ்சம் கடவுள் வாழ்த்து பாடிடலாம்னு நினைக்கிறேன்.

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
- அருணகிரி நாதர்

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; - வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்;
வருமாறு எம் மேல் வினை?
- பொய்கையாழ்வார்